- This event has passed.
மஹா கும்பாபிஷேகம்
அன்புடையீர், வணக்கம்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், சாம்ராஜ் நகர் தாலூக்கா, ஹொங்கனூர் கிராமத்தில் எழுந்தருளி உங்கனூர் குல மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நம் குல தெய்வம் அருள்மிகு தொம்பகாளீஸ்வர சுவாமி, அருள்மிகு வீரமாஸ்த்தி கெம்பம்மா தாயார் திருக்கோவில் திருப்பணிகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வாழ் உங்கனூர் குல மக்களால் சிறப்பாக திருக்கோவில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று திருக்குடநன்னீராட்டு பெருவிழாவானது
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 23-ம் நாள் (06.06.2025) வெள்ளிக்கிழமை ஏகாதசி திதியும், அஸ்தம் நட்சத்திரமும், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மிதுன லக்கினத்தில்
ஸ்ரீ ஸ்ரீ நிர்மலாநந்தா சுவாமிகள் ஆதிசுஞ்சனகிரி
அவர்கள் தலைமையில்,
ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு சிவராத்திரீஸ்வரா சுவாமிகள்
சுத்தூர்மடம், நஞ்சன்கூடு.
ஸ்ரீ ஸ்ரீ சுரேந்தர ஹெக்டே சுவாமிகள்
தர்மஸ்தலம்.
மைசூர் மஹாராஜா, எதுவீர் ராஜா உடையார் M.P.
மைசூர்.
Dr. செல்வப்பிள்ளை ஐயங்கார் M.A., P.hd.
மைசூர்.
கல்வித்தந்தை, கொடைவள்ளல்
உயர்திரு. ஓ. ஆறுமுகசாமி அய்யா
கோவை, தமிழ்நாடு.
ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
அதுசமயம் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இவ்வினிய திருக்குட நன்னீராட்டு பெருவிழாவினை கண்ணினால் கண்டு இம்மண்ணில் பிறந்த பெறும் பயனை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.
- சுவாமிக்கு கும்பாபிசேகம்,
- ருத்திர ஹோமம், பிரவார்சனை,
- அம்மனவர்களின் கும்குமார்சனை,
- மகானை வேத்யா சமர்பணா,
- மகானிரஞ்சனா,
- அஷ்ட்ராவதனா சேவை.
- ராஷ்ட்ராசீர்வசனாம்,
- தீர்த்தகுடம் வினியோகம்,
- வேத ஆசீர்வசனம்,
- ஆசார்யா பூஜை
